Monday, December 8, 2025 10:10 am
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாரிய மண்சரிவு ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்புக்கள் கண்டி மாவட்டத்திலுள்ள கடுகன்னாவ பகுதியில் பதிவாகியுள்ளது.
கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி , இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அந்த வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

