Friday, December 26, 2025 3:30 pm
மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறை கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது.
குறித்த பாடசாலையில் உள்ள கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடங்கள் எனவும், புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டிடங்கள் ஆபத்து மிக்கதாக இருப்பதாக தெரிவித்து சில மாதங்களுக்கு முன்னால் மக்களால் பேரணி நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று மாணவர்கள் இல்லாத வேளையில் கட்டிடம் உடைவடைந்துள்ளது.


