Tuesday, March 10, 2026 9:59 am
நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே தகராறு காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது. சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

