Monday, January 19, 2026 3:38 pm
இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne ) கடற்கரை பகுதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிப்ஸ் (Chips) பாக்கெட்டுகள் கரை ஒதுங்கியுள்ளன.
இந்த வாரத் தொடக்கத்தில் ‘உணவு மற்றும் பேக்கேஜிங்’ பொருட்களை ஏற்றி வந்த சில கப்பல் கொள்கலன்கள் கடலில் விழுந்தன.

அந்தக் கொள்கலன்கள் கரைக்கு வந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த ஆயிரக்கணக்கான சிப்ஸ் பாக்கெட்டுகள் கடற்கரை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.
சிப்ஸ் பாக்கெட்டுகளால் மூடப்பட்ட அந்தக் கடற்கரை பார்ப்பதற்கு கரீபியன் தீவுகளின் பொன்னிற மணல் பரப்பு போலத் தோன்றியது.

