Tuesday, November 18, 2025 9:36 pm
சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான புஜியன் (Fujian) இயக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள், பிஎல்ஏ எனப்படும் சீன மக்கள் விடுதலை இராணுவப் பிரிவின் கடற்படை, இன்று செவ்வாய்க்கிழமை மின்காந்தம் பொருத்தப்பட்ட போர்க்கப்பலின் முதலாவது கடல்சார் பயிற்சியை நடத்தியுள்ளது.
இது விமானம் தாங்கி கப்பலான புஜியன் என்ற கப்பலின் வேகத்தை பிரதிபலிப்பதாக சீன மத்திய தொலைக்காட்சி (China Central Television – CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.
விமானம் தாங்கிக் கப்பலை மையமாகக் கொண்ட புஜியன் உருவாக்கம் சமீபத்தில் பல பொருள் கடல்சார் பயிற்சியை நடத்தியது, இது இயக்கப்பட்டதிலிருந்து நேரடியான முதலாவது கடல் பயிற்சி என்று சீன மக்கள் விடுதலை இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் பொதிகளை ஏற்றி இறக்குதல் மற்றும் கப்பலில் இருந்து விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப் பயிற்சி ஏதேனும் போர் ஒன்றுக்கான முன் ஆயத்தமா என்ற தொனியில் கேள்விகள் எழுந்துள்ளன.
ரசிய – உக்ரெயன் போர், இஸ்ரேல் காசா போர் மற்றும் இந்தோ – பசுபிக் விவகாரங்கள் தொடர்பான சூழலில், சீனா இவ்வாறான கனரக விமானங்களை பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.
மின்காந்தம் பொருத்தப்பட்ட சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான புஜியன், தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சான்யாவில் உள்ள கடற்படைத் துறைமுகத்தில் நவம்பர் 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதாக அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சீன மத்திய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

