Monday, December 22, 2025 11:33 am
உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவதோடு ஒரு பெரிய தங்கச் செல்வத்தையும் கண்டுபிடித்துள்ளது.
சீனா , ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால் ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கு அடியில் உள்ள தங்கச் சுரங்கத்தை கண்டுபிடித்துள்ளது.
இது சீனாவின் ஒரு பிரம்மாண்ட கண்டுபிடிப்பாக காணப்படுகின்றது .
சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த தங்க இருப்பின் வாயிலாக லைஜோவின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 இலட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது சீனாவின் தேசிய தங்க இருப்பில் தோராயமாக 26 சதவீதமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்க கையிருப்பில் , ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த சீனா இந்த கண்டுபிடிப்பின் வாயிலாக தங்க இருப்பு மற்றும் தங்க உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கம் என்றாலே எப்போதும் ஒரு தனி மர்மமும் ஈர்ப்பும் உண்டு. அந்தத் தங்கத்தைத் தேடி மனிதன் காடு , மேடு , மலை என அலைந்த காலம் போய் , இப்போது கடலுக்கு அடியில் 2000 மீற்றர் ஆழத்தில் பிரம்மாண்ட ‘தங்க உலகத்தையே’ கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது சீனா!
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கனிம கண்டுபிடிப்பாகக் கருதப்படுவதோடு , உலகளாவிய தங்க சந்தையில் சீனாவின் செல்வாக்கையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


