Friday, December 19, 2025 11:40 am
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


