Friday, February 27, 2026 10:48 am
யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன. இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் தமது போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

