Saturday, December 20, 2025 10:11 am
பாணந்துறையில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் வேகட பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

