Thursday, November 13, 2025 8:21 am
வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில பகுதிகளை இலங்கைக்கான ஐநா பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான கனடா பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த பிரதிநிதிகள் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் சில பகுதிகளை பார்வையிட்டுள்ளனர்.
ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சில பகுதிகளையும் வாகனங்களில் இருந்தபடியே பார்வையிட்டதுடன் ஒளிப்படமும் எடுத்துள்ளனர்.
இந்த பிரதிநிதிகளின் வருகை என்பது உத்தியோக பூர்வ வருகையா அல்லது தனிப்பட்ட விஜயமா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாக வில்லை

