Saturday, November 29, 2025 3:22 pm
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டுள்ளது. ஆனால் இன்று சனிக்கிழமை நண்பகல் கிடைத்த செய்திகளின் பிரகாரம், வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் வந்த செய்தி–
பேருந்தில் சிக்கியுள்ள பயணிகளை கடற்படையினரும் விமானப்படையினரும் இணைந்து மீட்கும் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கொழும்பில் உள்ள விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கிற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்
இன்று சனிக்கிழமை காலை வரை மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து சுமார் 50 பயணிகளை மீட்கும் நடவடிக்கை கடற்படையினரும் விமானப் படையினரும் இணைந்து உடனடியாக முன்னெடுத்தனர்.
கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வரை மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பேருந்தில் இருந்து இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது,
தேவையான உபகரணங்களை பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். விசேட ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

