Friday, December 5, 2025 10:15 am
புகையிரத பருவ சீட்டுகளில் பேருந்து பயணத்தை இணைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களது புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இது பயணிகளுக்கு புகையிரத மற்றும் பேருந்து சேவைகளை ஒரே சீட்டில் பயன்படுத்தும் வசதியை அளித்து ஒருங்கிணைந்த போக்குவரத்தை வழங்கும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

