Monday, December 15, 2025 11:32 am
பாடசாலை ஒன்றிற்கு சொந்தமான பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு, கொலம்பியாவிலுள்ள லிசியோ ஆன்டியோக்வேனோ உயர் பாடசாலையின் மாணவர்களை ஏற்றிச் சென்ற குறித்த பஸ், கரீபியன் நகரமான டோலுவிலிருந்து மெடலினுக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 20 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

