Monday, November 17, 2025 11:55 am
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்றும் சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முஃப்ரிஹாத் அருகே நடந்த இந்த விபத்தின் போது, குறித்த பஸ் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பஸ்ஸில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

