Monday, December 29, 2025 4:40 pm
எதிர்வரும் 2026ம் ஆண்டுக்கான வெசாக் பௌர்ணமி தினமாக மே 30 ம் திகதியை அறிவிக்குமாறு பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு மே மாதம் 01ம் திகதி மற்றும் 30ம் திகதி என இரண்டு பௌர்ணமி தினங்கள் வருகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில் மே மாதம் 01ம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாளில் நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி நீண்டகால சாசன மரபுகளுக்கு அமைய ‘விசா’ அமையும் மே மாதம் 30ம் திகதியையே வெசாக் பௌர்ணமி தினமாகக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய , 2026ம் ஆண்டு மே 30ம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாகப் பிரகடனப்படுத்தி , வெசாக் தினத்துடன் தொடர்புடைய பாரம்பரிய சமயக் கடமைகள் மற்றும் அரச விழாவினை நடத்துவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

