Monday, January 19, 2026 4:51 pm
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான வழக்கு இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாத நிலையில் வழக்கினை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

