Wednesday, December 3, 2025 3:57 pm
இலங்கையில் பேரிடர் மீட்புபணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் கலந்துரையாடலை நடத்தியதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் டித்வா புயல் காரணமாக இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மீட்புபணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட பதிவில், பிரிட்டனின் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் இலங்கைக்கு தெரிவித்துக்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாக தெரிவித்தேன்.
அவசரகால உதவிக்காக பிரிட்டன் அரசு அறிவித்துள்ள 675,000 பவுண்ட் ( £ ) நிதி ஒதுக்கீடு பற்றியும் நீண்ட கால மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான ஆதரவுகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடினேன்.
டித்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் வலியுறுத்தினேன் என பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


