Thursday, February 26, 2026 10:31 am
பிரித்தானியா, கோர்டன் (Gorton) மற்றும் டென்டன் (Denton) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
முன்னாள் தொழிலாளர் கட்சி எம்.பி. ஆண்ட்ரூ க்வின் மருத்துவக் காரணங்களுக்காக விலகியதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் தொழிற் கட்சி (Labour Party), வலதுசாரி கொள்கை உடைய சீர்திருத்தக் கட்சி (Reform UK) மற்றும் பசுமைக் கட்சிக்கும் (Greens) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பொருளாதார மாற்றங்கள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பில் ஆளும் கட்சி மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பிறகு சந்திக்கும் மிக முக்கிய சவாலாக இந்தத் தொகுதிகள் பார்க்கப்படுகின்றன.
இன்று பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை அதிகாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

