Monday, December 8, 2025 1:30 pm
தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்க அல்லது மேம்படுத்த உருவான சாதனங்களின் பயன்பாடாகும். அது மட்டுமல்லாமல் மனித செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் , சமூக வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தகவல் தொழில்நுட்பம் , மருத்துவ தொழில்நுட்பம் , தொழிற்சாலை தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
மூளையினுடைய செயற்பாட்டினைக் கண்காணிப்பதற்காக ‘Temple’ என்ற புதிய தொழில்நுட்பச் சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸொமேட்டோ (Zomato) நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.
மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை நேரடியாகவும் , துல்லியமான முறையிலும் தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக ‘Temple’ என்ற இந்தச் சிறப்புத் தொழில்நுட்பச் சாதனம் உதவும் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் பயனர்களின் மூளைச் செயற்பாடுகள், அழுத்த நிலைகள் (Stress levels ) , மற்றும் ஒட்டுமொத்த நரம்பியல் ஆரோக்கியம் (neurological health) குறித்து ஆழமான தரவுகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் , இது அறிமுகமாகும் சரியான திகதி மற்றும் அதன் விலை குறித்து உத்தியோகபூர்வ விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என ‘தீபிந்தர் கோயல்’ தகவல் வெளியிட்டுள்ளார்.

