Thursday, February 26, 2026 11:38 am
கொழும்பு – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

