Tuesday, December 2, 2025 9:23 am
கண்டி, மாத்ளை, நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மத்திய மாகாண அரச வைத்தியசாலைகளின் சவச்சாலைகளில் சடலங்கள் நிரம்பியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வைத்தியசாலைகளில் சடலங்களை பராமரிக்க முடியவில்லை என்றும் உடல்கள் உருக்குலைவதற்கு முன்னர் உறவினர்கள் அடையாளப்படுத்தி சடலங்களை எடுத்துச் செல்லுமாறும் அமைச்சர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளதாலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாலும் அரச அதிகாரிகள் பணிக்கு வரமுடியாமல் இருப்பதாக கூறிய அமைச்சர் ஆனந்த விஜேபால, மரண விசாரணை அதிகாரிகள் பலர் இறந்துள்ளனர் என்றும் இதனால் சடலங்களை உடல் கூற்று பரிசோனைக்கு உட்படுத்த முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மரண விசாரணை நடத்தாமல் உடல்களை உறவினர்கள் எடுத்துச் செல்ல முடியும் எனவும் அமைச்சர் விளக்கமாகக் கூறினார்.
மத்திய மாகாணத்தில் கூடுதல் அழிவுகள் ஏற்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சர் முப்படைகளிடம் உதவிகளை கோருமாறும் கேட்டுள்ளார்.

