Monday, December 1, 2025 11:43 am
கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்த நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வழிப்பாதையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த கடற்படை வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.
உடனடியாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தின் போது அப்பகுதியில் செயல்பட்டு வந்த வெள்ள நிவாரணக் குழுவில் இந்த பணியாளர்கள் இருந்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

