Friday, March 6, 2026 4:21 pm
யாழ்ப்பாணம், குருநகரிலிருந்து பாலைதீவு திருவிழாவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு 25 வரையிலான பக்தர்களை ஏற்றி சென்ற படகொன்று சிறிது நேரத்திலேயே கடலில் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியது. எம்.ஜோசப் என்ற 80 வயதான நபரும் பிரான்சிஸ் ஸ்டீபன் என்ற 57 வயதான நபருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

