மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை சிகையலங்காரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் ஐந்து பதக்கங்களை வென்றிருந்த நிலையில் அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.
இதன் போது சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவரான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ அவர்களுக்கு அழகுக்கலை நிபுணர்களுக்கு மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இலங்கை சார்பில் போட்டியிட்டவர்களில் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா சஞ்சீவன் இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்த அழகுக்கலை போட்டி நிகழ்ச்சியில் 14 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஏழு அழகுக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
