Friday, March 6, 2026 3:02 pm
புனித ரமழான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் இன்று நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் ஹிஷாம் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அல்-அக்ஸா மசூதி மாத்திரமன்றி, பழைய ஜெருசலேம் நகரிலுள்ள மேற்கு சுவர் (Western Wall) மற்றும் திருக்கல்லறை தேவாலயம் (Church of the Holy Sepulchre) உட்பட அனைத்து புனிதத் தலங்களும் இன்று மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

