Tuesday, January 6, 2026 10:04 am
கடந்த ஆண்டு நடத்தப்படாத க.பொ.த உயர் தரப் பரீட்சை பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் 12ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் இன்று செவ்வாய்க்கிழமை (6) முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி மாதம் 12 – 20 ம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2362 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

