Saturday, December 13, 2025 1:40 pm
கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.
சபுகஸ்கந்த பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பயணித்த ஜீப் வாகனம் வீதியில் பயணித்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் இரண்டு பெண்களும் குழந்தை ஒன்றும் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் இருக்கவில்லை எனவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை 02 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

