தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்றாகும்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நேற்று நடத்தியது.
இதன்போது சரயு ஆற்றின் கரையில் 2617215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார்.