Monday, January 5, 2026 3:18 pm
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டெமியன் மார்ட்டின் தற்போது குணமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சல் காரணமாகக் கடந்த வாரம் கோமா நிலைக்கு சென்றிருந்த நிலையில் அவர் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்த அவர் பேசத் தொடங்கியுள்ளதாக, மார்ட்டினின் நெருங்கிய நண்பரும் முன்னாள் சக வீரருமான எடம் கில்கிறிஸ்ட் மார்ட்டினின் குடும்பம் சார்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
டெமியன் மார்ட்டின் அவுஸ்திரேலிய அணிக்காக 1992 முதல் 2006 வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4406 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

