Wednesday, February 11, 2026 3:22 pm
கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள A9 வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் வந்த இருவர் குறித்த வைத்தியரை வழிமறித்துத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலுக்குள்ளான வைத்தியர் பலத்த காயமடைந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் இலக்கம் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களின் விபரங்களைச் சேகரிக்க பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

