Wednesday, February 11, 2026 1:02 pm
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
மேலும் 4 பேருக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்ட ஏனையோர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

