Thursday, February 26, 2026 9:41 am
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 89 இலட்சத்து 375 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட நிதியானது இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

