ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த கிரகமாகும். சுக்கிரன் காதல், ஆடம்பரம் மற்றும் நல்லிணக்கத்தின் அதிபதியாக கருதப்படுகின்றார்.எனவே சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாகும். தீபாவளிக்கு பிறகு நவம்பரில் சுக்கிரன் அதன் சொந்த திரிகோண ராசியான துலாம் ராசியில் பிரவேசிப்பதால் அனைத்து ராசிகளிலும் பல மாற்றங்கள் நிகழப் போகின்றது.
இந்த பெயர்ச்சி வலுவான ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இந்த மாற்றம் பல ராசிகளுக்கு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுக்கிரனின் இந்த பெயர்ச்சி, சில ராசிக்காரர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தையும், மகத்துவத்தையும் அளிக்கப் போகின்றது.
துலாம்
சுக்கிரன் தனது சொந்த ராசிக்கு செல்வது துலாம் ராசிக்காரர்களுக்கு விதி விலக்கான அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் அளிக்கப் போகின்றது. இந்த கால கட்டத்தில் அவர்களின் இயற்கையான வசீகரமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சொத்து, வாகனங்கள் மற்றும் புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஆடம்பர வாழ்க்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
நிதி ரீதியாக, இந்த காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வருவதுடன் மற்றும் கடன் பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது. அவர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும், இது அவர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். இந்த நேர்மறையான மாற்றங்கள் நீண்ட கால இலட்சியங்களை நிறைவேற்ற அவர்களுக்கு உதவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, இந்த சுக்கிரப் பெயர்ச்சி தொழில் மற்றும் வணிகத்தில் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிக்கின்றது. சுக்கிரன் அவர்களின் பத்தாவது வீட்டில் நுழைவதால், புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் காதல் வாழ்க்கை இந்தக் கால கட்டத்தில் சிறப்பாக இருக்கும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
குடும்பத்தில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைகளை சரியான திட்டமிடல் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் தீர்த்து வைப்பார்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுக்களும், அங்கீகாரமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கு, சுக்கிரனின் வருகை மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அளிக்கப் போகின்றது. இந்தப் பெயர்ச்சி அவர்களின் ஒன்பதாவது வீட்டில் நடப்பதால் அதிர்ஷ்டம் அவர்களுக்கு அனுகூலமாக இருக்கப் போகின்றது. அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரனின் ஆசியால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடி வரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.