Thursday, February 5, 2026 10:10 am
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் இன்று முற்பகல் 9 மணி முதல் இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி இரவு 9 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளிடமிருந்தும் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான இணையவழி விண்ணப்பம் கோரல், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 5ஆம் திகதி முற்பகல் 9 மணியுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

