Wednesday, December 3, 2025 1:58 pm
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டமிடப்பட்ட நன்கொடை குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் அறிவித்தார்.

ஹொங்கொங்கில் மனிதாபிமான முயற்சிகளுக்கு திட்டமிடப்பட்ட பங்களிப்புகளை அறிவித்த ஒரு வாரத்திற்குள், ஆப்பிள் நிறுவனம் தற்போது அண்மைய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு உதவ முன்வந்துள்ளது.
குறித்த நாடுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மொத்தம் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர்.

