கடந்த காலங்களில் இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு கடந்த அரசாங்கங்கள் செலுத்தியுள்ள நட்டஈட்டுத் தொகை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முதலைக் கண்ணீர் விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு காலி முகத்திடல் போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய குழுவில் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் காணப்பவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்று திட்டமிட்டு இவ்வாறான சேதங்களை மேற்கொள்ளமால் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு சூழல் உருவாகியிருக்காது எனவும் அவர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.