Wednesday, December 10, 2025 10:34 am
பதுளை எகரிய, மீகொல்ல மேல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு தப்பிஓடியதாகவும், இதனால் அப்பகுதியில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும் பல குடும்பங்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை புரட்டிப் போட்ட டித்வா புயல் காரணமாக இலங்கை முழுவதும் பாதிக்கப்பட்ட போதும் மலையகப் பகுதிகளே பெரிதும் பாதிக்கப்பட்டன. மண்சரிவுகளினால் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. புயலின் தாக்கம் ஓய்ந்த போதும் தொடர்ந்து ஏற்படும் மண்சரிவுகள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டில் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி டித்வா புயலினால் நாட்டில் மொத்தம் 639 பேர் உயிரிழந்ததுடன், 203 பேர் காணாமல் போயுள்ளனர்.

