Thursday, November 20, 2025 7:06 pm
கிளிநொச்சி கல்லாறு தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது. பரீட்சை பெறு பேறுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய திறமைான மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.
பாடசாலை அதிபர் கஜமுகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி வடக்கு, பிரதிக் கல்விப் பணிப்பாளர் கருணாமூர்த்தி பத்மகாந்தன், கண்டாவளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரவீந்திரநாதன், ஆசிரிய ஆலோசகர் பேரம்பலம் சுரேஸ், கிராம அலுவலர் சேகர் மற்றும்,பாடசாலையின் பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

