Tuesday, October 28, 2025 11:55 am
பல்வேறு காரணங்களுக்காக, தொழில்நுட்பத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்பு செய்யப்படுகின்றது. இந்த நிலையில் இணையவழி வணிக நிறுவனமான அமேசான் (Amazon) நிறுவனம் வரலாற்றில் மிகப்பெரிய ஆட்குறைப்புகளை அறிவித்துள்ளது.
முன்னர் 2022 ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம், இதேபோன்ற வேலைக் குறைப்புகளை அறிவித்தது. இதனால் 27000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை இழந்தனர்.
இந்த நடவடிக்கை செலவினங்களைக் குறைப்பதற்கும் கொவிட் தொற்றுநோயின் தேவை அதிகரித்தபோது ஏற்பட்ட அதிகப்படியான பணிநீக்கத்தை சரிசெய்வதற்கும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் அதிகப்படியான ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு நடைபெற்றதாகவும், அதனை குறைத்து செலவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மறுகட்டமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்ற நிலையில், 30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

