Monday, February 23, 2026 10:17 am
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சந்தேகநபரை இவ்வாறு 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக ஹோமாகம பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

