Tuesday, October 28, 2025 1:56 pm
நடிகர் அஜித் கார் ரேஸ் சீசன் முடிந்து விட்டதால் தற்போது இந்தியாவுக்கு திரும்பி தனது அடுத்த பட பணிகளை தொடங்க இருக்கின்றார்.
குட் பேட் அக்லீ (Good Bad Ugly) படம் ஹிட் ஆன நிலையில் இயக்குனர் ஆதிக் உடன் மீண்டும் அஜித் கூட்டணி சேர்க்கின்றார். இன்னும் ஒரு வாரத்தில் AK 64 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த படத்திற்காக அஜித் எவ்வளவு ? சம்பளம் வாங்க இருக்கின்றார் என்கிற தகவல் வந்திருக்கின்றது. அதன்படி 183 கோடி ரூபாய் சம்பளம் அஜித்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
அஜித் குட் பேட் அக்லீ படத்திற்காக 163 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது அடுத்த படத்திற்காக 20 கோடி சம்பளம் அவருக்கு அதிகரித்து இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

