Saturday, December 6, 2025 4:30 pm
நடிகர் அஜித்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சிவா மீண்டும் அஜித்துடன் கை கோர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அஜித் நடித்த வேதாளம் , விஸ்வாசம் , வீரம் , விவேகம் போன்ற படங்களை சிறுத்தை சிவாவே இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்துடன் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
இதனால் சிறுத்தை சிவா அஜித்துக்கு கதை சொல்ல சென்றுள்ளதாகவும் , இருவரின் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தில் அஜித்தின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

