சமூக ஊடகங்களிலும், பேஸ்புக்கிலும் பரவும் மோசடியான AI-உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த வீடியோக்கள் மத்திய வங்கியின் ஆளுநர் முதலீட்டுத் திட்டங்களை ஆதரிப்பதாகவும், நம்பத்தகாத நிதி வருமானத்தை உறுதியளிப்பதாகவும், பார்வையாளர்களை சந்தேகத்திற்குரிய வெளிப்புற இணைப்புகளுக்கு வழிநடத்துவதாகவும் தவறாக சித்தரிக்கின்றன. அத்தகைய விளம்பரங்களை மறுத்துள மத்திய வங்கி முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபடவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை என்று வலியுறுத்தியுள்ளது.