Wednesday, December 3, 2025 9:52 am
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணைய வலையமைப்பை நாளை முழுமையாக சீரமைக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பன இதற்காக கடுமையாக உழைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 11 மாகாணங்களில் பைபர் வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டன. 09 இடங்களின் வலையமைப்பு 24 மணி நேரத்திற்குள் சீரமைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடைப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய இடங்களில் பைபர் வலையமைப்பின் ஊடாக தற்போது தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
4000 க்கும் மேற்பட்ட பிரதான மின்மாற்றி கோபுரங்கள் செயலிழந்த நிலையில் சுமார் 2800 கோபுரங்கள் மீளசெயற்பாட்டு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 949 கோபுரங்கள் மின் தடை காரணமாக செயலிழந்துள்ளன.
எஞ்சிய அனைத்து இடங்களையும் சீரமைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன எனவும் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்சார வசதிகளை வழங்க முப்படைகள் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன எனவும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

