Thursday, January 29, 2026 10:05 am
2026ஆம் ஆண்டுக்கான தரம் 1 பாடசாலை மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், முதலாம் தரத்திற்கான பாடத்திட்டத்தை இந்த வருடம் முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் பாடசாலை மாணவர்களை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கான தேசிய விழா இன்று காலை அதுருகிரியவிலுள்ள குணசேகர கல்லூரியில், கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
எந்தவொரு சிறுவர்களின் கல்வியும் பெற்றோரின் நிதியால் தீர்மானிக்கப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டும் பிரதமர், எந்தவொரு சிறுவர்களும் கல்வியிலிருந்து விடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

