Wednesday, January 7, 2026 4:13 pm
படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது ஓய்வில் உள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா “கில்லர்” என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.
அந்த திரைப்படத்தின் முக்கியமான சண்டை காட்சியைப் படமாக்கி கொண்டிருந்தபோது, கயிற்றால் கட்டப்பட்டு எஸ்.ஜே.சூர்யா சண்டை காட்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தார்.
கயிற்றில் தொங்கிய எஸ்.ஜே.சூர்யா இறங்கும் பொழுது எதிர்பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி அவரது காலை கிழித்துள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது 2 கால்களிலும் தையல்கள் போடப்பட்டுள்ளன.
அவரை 2 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் தற்போது ஓய்வில் இருப்பதாகவும், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

