Wednesday, January 7, 2026 11:39 am
தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நூல்களில் உள்ள குறித்த பகுதிகளை நீக்கிய பின்னரே விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கல்வி முறையில் காணப்பட்ட ஒரு பெரிய குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ,புதிய கல்விச் சீர்திருத்தத்தின் படி தரம் 6 ஆங்கிலப் பாடக் கற்றல்த் தொகுதியை அச்சிடுவதற்காக சுமார் 3.5 லட்சம் பிரதிகள் அச்சிடுவதற்காக 6 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

