Monday, April 13, 2026 3:59 pm
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எந்தவிதமான உயிர் சேதங்களும் இன்றி 7 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
அம்பன் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது மதகு ஒன்றுடன் மோதி, மதகின் பாதுகாப்பு கற்கள் மூன்றினை உடைத்துக்கொண்டு மின்சார கம்பம் மீது மோதி வாகனம் வயலிற்கு பாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் பயணித்த 7 பேருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் தெய்வாதீனாமாக உயிர் தப்பியுள்ளனர். விபத்து தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

