Thursday, February 12, 2026 11:23 am
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த 37 வயதுடைய கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த முதலைகள், மலைப்பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வனவற்றின் பதப்படுத்தப்பட்ட மற்றும் வர்ணம் பூசப்பட்ட 19 விலங்குத் தோல் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை “துணி வகைகள்” எனக்கூறி அதிகாரிகளை திசைதிருப்ப சந்தேகநபர் முயற்சி செய்த போதிலும் சுங்க அதிகாரிகளின் நுணுக்கமான சோதனையில் இவை கைப்பற்றப்பட்டன.

