Saturday, December 20, 2025 1:12 pm
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (20) யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்றதாகவும் , இவ் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் , அவர்களுக்கு எதிர்திசையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது.
இதனை அடுத்து தாயும் , மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் ,
எதிர்திசையில் பயணித்த பவுசர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் , மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

